கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து என் கவனத்துக்கு வரவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து

சேலம் : கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கட்சி கொடி கம்பம் நடவேண்டாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். கோவை சிங்காநல்லூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இருவா் காயமடைந்தனர்.

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் பதாகை சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இதைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கு சென்னை உயா் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடா்ந்து விளம்பரப் பதாகைகள் வைக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் குறைந்தன. இந்நிலையில் தமிழக முதல்வா் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.

அந்த வழியாக இளம் பெண் ஒருவா் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவர், வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த லாரி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. இதற்கு அதிமுக அரசு தா காரணம் என்று பலம் குற்றம் சாட்டி வந்தநிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை என்று தெரிவித்துளளார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸ் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் : முதல்வர் விளக்கம்

தன்னாட்சி பெற்ற அமைப்பான மாநில தேர்தல் ஆணையம் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கால அவகாசம் குறைவு எனபவதால்  உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்பமனு வாங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>