யானை தாக்கி மூதாட்டி பலி மகளுக்கு கால் முறிவு

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே பெரியூர் ஊராட்சி, நல்லூர்காடுவளவு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50). இவரது மனைவி ராஜாத்தி (42). இவர்கள் மற்றும் ராஜாத்தியின் தாயார் மாலையம்மாள் (65) ஆகிய 3 பேரும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் கவுச்சிகொம்பிலிருந்து நல்லூர்காடுக்கு காட்டுப்பாதையில் நடந்து சென்றனர்.

அப்போது திடீரென புதரில் இருந்து வந்த காட்டுயானை, மூவரையும் தாக்க துவங்கியது. யானை தாக்கியதில் மாலையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜாத்திக்கு கால் முறிவு ஏற்பட்டது. ராஜேந்திரன் உயிர் தப்பினார். தகவலறிந்ததும் தாண்டிக்குடி போலீசார், சென்று ராஜாத்தியை மீட்டு கே.சி.பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories:

>