கண்ணமங்கலம் அடுத்த மேல்நகரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: அமைச்சரிடம் மனு

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த மேல்நகர் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பததற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு அளித்தனர். காட்பாடி- விழுப்புரம் ரயில் பாதையில் மேல்நகர் அருகே ரயில்வே கிராஸிங் உள்ளது. இவ்வழியே மேல்நகர், அய்யம்பாளையம், கீழ்நகர், பாளைய ஏகாம்பரநல்லூர், விவி தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தினசரி சென்று வருகின்றனர். மேலும், நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் விவசாய நிலங்களுக்கு செல்கின்றன.

இந்நிலையில், இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறையினர் அளவெடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், சுரங்கப்பாதை அமைவதால்  அனைவரும் பாதிப்புக்குள்ளாக கூடும் எனக்கூறி இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் நேற்று மனு கொடுத்தனர். அதன்பேரில், சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்திற்கு சென்று அமைச்சர்  ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்களிடம் இத்திட்டத்தை கைவிடுவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: