கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு உதகை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், நீதிபதி வடமலை முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார்.

இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: