சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சரிவு..: சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சரிவு காணப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.29,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 குறைந்து ரூ.3,635க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ரூ.3,798 ஆக உள்ளது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 30,568 ரூபாயிலிருந்து இன்று 30,384 ரூபாயாகக் குறைந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 184 ரூபாய் சரிந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 1.40 காசுகள் குறைந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 47.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது. தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்து, நேற்று உயர்ந்து இன்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>