சதாப்தி ரயிலில் குடிநீர் இனி அரை லிட்டர் தான்

புதுடெல்லி: சதாப்தி ரயில்களில் பயணிகளுக்கு அரை லிட்டர் குடிநீர் பாட்டில் மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. சதாப்தி ரயில்களில் நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஒரு பயணிக்கு 5 மணி நேர பயணத்துக்கு அரை லிட்டர் தண்ணீரும், 5 மணி நேரத்துக்கு மேல் பயணிப்போருக்கு ஒரு லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. சதாப்தி ரயில் பயண நேரம் அதிகபட்சமாக சுமார் எட்டரை மணி நேரம்தான் உள்ளது. தற்போதைய விதிகளின்படி ஒரு லிட்டர் வழங்குவதால் தண்ணீர் நிறைய வீணாகிறது. இதை தவிர்க்க, பயண நேரம் வேறுபாடின்றி அனைத்து பயணிகளுக்கும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘‘தண்ணீர் வீணாவதை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பயண நேர வித்தியாசம் இன்றி அனைத்து சதாப்தி பயணிகளுக்கும் அரை லிட்டர் தண்ணீரே வழங்கப்படும். கூடுதல் தண்ணீர் தேவைப்படுவோர் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: