லத்தியை வீசிய எஸ்.ஐ. கோவை எஸ்பிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை: பொள்ளாச்சி அருகே எஸ்.ஐ. லத்தியை வீசி வாலிபர்கள் காயமடைந்த விவகாரத்தில் கோவை மாவட்ட எஸ்.பி.க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம்பாளையம் பகுதியில் வாகன சோதனையின்போது கோட்டூர் எஸ்ஐ சம்பந்தம் லத்தியை வீசியதில் பைக்கில் சென்ற கோவை போத்தனூரை சேர்ந்த சென்பார்(18), குனியமுத்தூரை சேர்ந்த அப்சல்(17), சர்தார்(25), ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் போலீசார் மீதான அதிருப்தியை மக்களிடையே அதிகப்படுத்தியது.

இதனை தொடர்ந்து எஸ்ஐ சம்பந்தம் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து  கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் உத்தரவிட்டார். வால்பாறை டி.எஸ்.பி. விவேகானந்தன் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் போலீசார் லத்தியை வீசி வாலிபர்கள் 3 பேர் காயமடைந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோவை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: