வேலூர் மத்திய சிறையில் நளினி உண்ணாவிரதம் 11வது நாளில் வாபஸ்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனை வேலூர் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்தி வருவதாக, பெண்கள் தனிச்சிறையில் உள்ள அவரது மனைவி நளினி கடந்த 26ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று 11வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அவரிடம் தனிச்சிறை ஜெயிலர் அல்லிராணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முருகனை தனிச்சிறையில் இருந்து மீண்டும் பழைய சிறைக்கு மாற்ற வேண்டும். ரத்து செய்த சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து ஜெயிலர், சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் தெரிவித்து, பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்று நளினி நேற்று காலை உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். மேலும்,தனது முடிவை கணவர் முருகனிடம் தெரிவித்து, அவரையும் உண்ணாவிரதத்தை கைவிட சொல்லுங்கள். இதுதொடர்பாக அவர் தனது கைப்பட கடிதம் அளிக்க வேண்டும்’ என தெரிவித்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  அதற்கேற்ப முருகனிடம் பேச்சு நடத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: