அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் வைகோ திடீர் சந்திப்பு : அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இரண்டு பேரும் ஆலோசனை நடத்தினர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர் டிஆர்.செங்குட்டுவன் உடன் இருந்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவள்ளுவருக்கு நிகரான அறிஞர் உலகத்திலேயே கிடையாது.

இனம், மொழி, நாடு மற்றும் கண்டங்களை கடந்தவர் திருவள்ளுவர். திருக்குறளில் எந்தவொரு  நாடு, மன்னன் என எதையும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. தமிழ் என்ற சொல் கூட திருக்குறளில் கிடையாது. இதனாலேயே திருக்குறள் உலகப்பொதுமறை என அழைக்கப்படுகிறது.

திருவள்ளுவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அழுக்கானவர்களால் திருவள்ளுவரின் சிலை அழுக்காக்கப்பட்டுள்ளதாகவும்  இந்த செயல் வெட்கக்கேடானது. மனித கலம் உள்ளவரை திருவள்ளுவர் பேரொளியாக இருப்பார்.  திருவள்ளுவருக்கு  காவி வண்ணம் பூசுவது மன்னிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பாஜகவினருக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அரசியல்வாதிகள் இரண்டு பேர் சந்தித்து பேசினால் அரசியல் தான் பேசுவோம். மு.க ஸ்டாலினுடன் அரசியல் குறித்து பேசினேன். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அப்போது அது குறித்து பேசலாம்’ என்றார்.

Related Stories: