பிஎஸ்என்எல் ஊழியர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை விரைவு படுத்த உத்தரவு

புதுடெல்லி: பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டம், சொத்து அடமான திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளதாக,  அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, 4ஜி அலைவரிசையை இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியது. ₹69,000 கோடியிலான இந்த திட்டத்தில், பிஎஸ்என்எல் - எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றிணைத்தல், நிறுவன சொத்துக்களை அடமானம் வைத்து நிதி திரட்டுதல், அதன் மூலம் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் தலைமையில் கடந்த 1ம் தேதி பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிர்வாக குழுவுடன் பேச்சு நடத்தினார். இதில், விஆர்எஸ் திட்ட நெறிமுறைகளின்படி அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துக்களை அடமானம் வைத்து நிதி திரட்ட உரிய காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்’’ என்றனர்.

Related Stories: