காஞ்சியில் போதி தர்மர் சிலை அமைக்க நிதியுதவி: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியா - சீனா இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதன் ஒருகட்டமாகவே போதி தர்மரின் பெருமைகளை மையமாக வைத்து தமிழ்நாட்டில் சுற்றுலா வளையம் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக காஞ்சிபுரத்தில்  மிகப்பெரிய அளவில் போதி தர்மரின் சிலை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் தொடங்கி மாமல்லபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட புத்த மதத்துடன் தொடர்புடைய 6 நகரங்களை இணைக்கும் வகையில் வட்டச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்ய தமிழக அரசின் சுற்றுலாத் துறை திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதை தமிழக அரசால் மட்டும் செயல்படுத்த முடியாது. எனவே, இத்திட்டத்திற்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

Related Stories: