திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சூரசம்ஹாரத்தை காண பக்தர்கள் திருச்செந்தூர் வந்துள்ளனர். சூரபத்மனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி சூரசம்ஹாரம் என்றழைக்கப்படுகிறது. சூரசம்ஹாரத்தை ஒட்டி திருச்செந்தூரில் பாதுகாப்பு பணிக்காக 3,500 போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: