வாட்ஸ் அப் உளவுக்கு பாஜ உதவி செய்ததா? : பிரியங்கா காந்தி சந்தேகம்

புதுடெல்லி: இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் பயன்பாட்டை, இஸ்ரேலை சேர்ந்த, ‘என்எஸ்ஓ குரூப்’ என்ற அமைப்பு உளவு பார்த்ததை வாட்ஸ் அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த தகவல்களை அது பல்வேறு நாடுகளுக்கு விற்றுள்ளது. இதற்கு மத்திய அரசும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ.வோ அல்லது மத்திய அரசோ, இஸ்ரேல் நிறுவனம் வாட்ஸ் அப் தகவல்களை திருட உதவி இருந்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இது தேச பாதுகாப்பில் நடந்த ஊழலாகவும் கருதப்படும். மத்திய அரசு தனது விளக்கத்தை வெளியிட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: