பிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: இடிபாடுகளில் 5 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்சை நேற்று மீண்டும் பூகம்பம் தாக்கியது. இதில் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து நாசமடைந்தன. தெற்கு பிலிப்பைன்சில் கடந்த செவ்வாயன்று பூகம்பம் ஏற்பட்டது. மின்டானாவ் தீவில் ஏற்பட்ட இந்த பூகம்பம்  ரிக்டரில் 6.5 புள்ளிகளாக பதிவானது. இதில் வீடுகள், குடியிருப்புக்கள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி பள்ளி மாணவன் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். மக்கள் இயல்பு நிலைக்கு  திரும்பி வந்த நிலையில் மின்டானாவை ேநற்று மீண்டும் பூகம்பம் தாக்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.

வீடுகளுக்கு திரும்பியவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறினார்கள். தாவோ நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் 8 பேர் சிக்கி காயமடைந்தனர். கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்க கூடும் என்ற சந்தேகம் நிலவுவதால்,  அப்பகுதியில் மீட்பு குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே பகுதியில் மருத்துவ மையம் இடிந்து விழுந்ததில் உள்ளூர் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். நேற்றைய நிலநடுக்கத்தில் 5பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: