வல்லபாய் படேலை திருடப்பார்க்கிறார்கள் : பாஜ மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: இந்திரா காந்தியின் 35வது நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உருவப்படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவரைத் தொடர்ந்து முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, பொருளாளர் நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, ஜி.கே.தாஸ், ரங்க பாஷ்யம், ராயபுரம் மனோ, அமீர்கான், தாமோதரன், ஜான்சிராணி, சுமதி அன்பரசு, வக்கீல் சுதா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அப்போது, ரத்ததான முகாமை தொடங்கி வைத்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:  பாஜவிடம் சுதந்திர போரட்ட தலைவர்கள் இல்லை என்பதால் காங்கிரசிடமிருந்து எங்கள் தலைவர் வல்லபாய் படேலை திருடப்பார்க்கிறார்கள். இதை காங்கிரஸ் கண்டிக்கிறது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பழிவாங்கும் அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: