மாநிலங்கள் அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:  இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் அமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டங்கள் நடத்தியது. தமிழ்நாட்டில் பல போராட்டங்களையும், வழக்குகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது. 1956ம் ஆண்டு நவம்பர்1 சென்னை மாகாணம் உதயமானது. பின்னர் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அழுத்தமான குரல் கொடுத்தது. பின்னர் 1969ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் அண்ணாவால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  

ஆனால், இன்று மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜ மற்றும் சங் பரிவாரங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் எனப் பேசி மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதோடு நாட்டின் ஒற்றுமையை சிதைக்க முயல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், அனைத்து நிலைகளிலும் தமிழ் எனும் நிலையை எட்டவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என உறுதி ஏற்கிறது. மாநிலங்கள் அமைப்பு தினமான நவம்பர் 1-ம் நாளை ஆந்திரா மற்றும் கர்நாடகா விடுமுறை விட்டு அரசு விழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசும் கொண்டாட முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: