மின்னணு பேமன்ட் இலக்கு அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் மின்னணு முறையில் பணம் செலுத்தும் எண்ணிக்கை 4,500 கோடியை எட்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டில் யுபிஐ, டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை எண்ணிக்கை 400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவற்றில் மொபைல் மூலமான யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை மட்டும், சமீபத்திய 100 கோடியை எட்டியுள்ளது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் (பேமன்ட்) எண்ணிக்கையை 4,500 கோடியாக உயர்த்தி மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

தவிர, டிஜிட்டல் பரிவர்த்தனையை சிறப்பாக செயல்படுத்த ஒவ்வொரு வங்கிக்கும் இலக்கு நிர்ணயித்து மத்திய மின்னண மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்க வசதியாக, ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வணிகர்கள், வணிக நிறுவனங்களிடம் வங்கிகள் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: