நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைப்பு

நெல்லை : கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பல்கலை.,யின் கீழ் இயங்கும் அனைத்து கலை கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி ஒரு வாரம் ஆகும் நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன்பின் மழையளவு பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அருகே இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டுள்ளது.

இந்த காற்றழுத்த பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த மண்டலமாகவும் அதாவது புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டமும் அடங்கும். இந்த அறிவிப்பை அடுத்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தேர்வுகள் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பல்கலை.,யின் கீழ் இயங்கும் அனைத்து கலை கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Stories: