காஞ்சி.யில் டெங்கு ஒழிப்பு பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஏராளமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தியை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வடிவேல்நகர், தாயாரம்மன்குளம், திருப்பருத்திக்குன்றம் மற்றும் பிள்ளையார்பாளையம் மற்றும் வேகவதி சாலை ஆகிய பகுதிகளில் புனரமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் பணிகளை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது அவர், ‘’கால்வாயை சுற்றியுள்ள குப்பையை அகற்றவும் தெருக்களில் தேங்கும் தண்ணீர் வெளியேறும் வகையில் புதிய கால்வாய் அமைக்கவும், ஏற்கனவே உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் பெருநகராட்சி நகர்நல அலுவலர் முத்து, ஆய்வாளர் பிரபாகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Related Stories: