காஷ்மீரில் மனித உரிமை மீறல் எதிரொலி: பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த தடை

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் பாகிஸ்தான் எல்லையை பயன்படுத்த அந்நாடு தடை விதித்துள்ளது. வ‌ளைகுடா நாடான, சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று, சர்வதேச தொழில் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சவுதி அரேபியா பயணம் செய்கிறார். நாளை சவுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துக் கொள்வதோடு அந்நாட்டின் முக்கிய தலைவர்களான சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தையும் நரேந்திர மோடி சந்தித்து பேச இருக்கிறார். கடந்த மூன்றரை ஆண்டுகளில், இரண்டாவது முறையாக, பிரதமர் மோடி சவுதி அரேபியா செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடி ஐரோப்பிய  பயணத்திற்கு தனது வான் எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் வழக்கம் போல் தற்பொழுதும் தடை விதித்துள்ளது.

இதனை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் எதிரொலியாக பாகிஸ்தான் அரசு மோடியின் விமானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியிருக்கிறார். கடந்த செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற போதும் பிரதமர் மோடியின் விமானத்துக்கு அனுமதி அளிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அதேபோல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஐரோப்பிய பயணத்திற்கும் தனது வான் எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச விமான ஒழுங்குமுறை அமைப்பிடம் புகார் அளிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Stories: