நாடோடிகளின் தாய்மை வண்ணங்களால் பிரதிபலிக்கும் அரசமர இலையில் அசத்தல் ஓவியங்கள்: வேலூர் ஓவியர் சாதனை

வேலூர்: நாடோடிகளின் தாய்மை பாசத்தை வண்ணங்களால் பிரதிபலிக்கும் வகையில் அரசமர இலையில் அசத்தல் ஓவியங்களை வரைந்து வேலூர் ஒல்டுடவுன் பகுதியை சேர்ந்த இளைஞர் சாதனை படைத்து வருகிறார்.இறைவன் படைப்பில் இன்றியமையாதது ஓவியக் கலை. மனம், சொல், செயல், ஆக்கம் என இவை அனைத்தையும் ஒருங்கிணைந்து கைகளால் வரையப்படுவதே ‘ஓவியம்’ ஆகும். ஓவியங்கள் மூலமே மனிதன் கடவுளின் உருவத்தை இதிகாசம், புராணங்களில் கூறப்பட்டவற்றை மனதில் கொண்டு உருவாக்கினான். ஒருவரின் கற்பனை திறனை பறைசாற்றும் கலையாக ஒருகாலத்தில் பெரும்புகழ் கொண்டு சிறந்து விளங்கிய ஓவியக்கலை, தற்போதைய டிஜிட்டல் உலகத்தால் கொஞ்சம் நிலைகுலைந்து போயுள்ளது.

இந்த சூழலில் ஓவியக் கலையின் மூலமாக தனது திறமைகளை வெளிப்படுத்தி அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த இமயவரம்பன்(36) என்ற இளைஞர் இறங்கியுள்ளார்.

ஓவியத்தின் மீதான தீராத ஆர்வம் குறித்து இமயவரம்பன் கூறுகையில், ‘பள்ளியில் படிக்கும்போதே ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின்னர், வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில் படிக்கும்போது ஓவியக்கலையில் பயிற்சி பெற்றேன். சமீபத்தில்  சென்னையில் நடந்த உலக அமைதி மற்றும் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் நடந்த ஓவியப் போட்டியில் 1202 ஓவியர்களுடன் பங்கேற்று தனித்திறன் போட்டிகளில்  பரிசுகளை பெற்றுள்ளேன்.அதோடு சிகரெட்டுகள் மீது எச்சரிக்கை ஓவியங்கள், முட்டை மீது குழந்தைகள் ஓவியம் என வரைந்து காட்சிப்படுத்தியுள்ளேன். இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய முயற்சியாக அரசமர இலையில் வாட்டர் கலர் மூலம் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளேன்.எனது ஓவியம் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களை வரைய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக மதுபாட்டில் மீதே அதன் தீமை குறித்தும், சிகரெட் மீதே அதன் பாதிப்பு குறித்தும் ஓவியங்கள் வரைந்து காட்சிப்படுத்தியுள்ளேன்.

ஆனாலும் குடும்ப வருமானத்திற்கு காட்பாடி- திருவலம் சாலையில் சாவிக் கொத்தில் ஓவியம், அரிசியில் பெயர் எழுதும் கடை வைத்துள்ளேன். எனது ஆசை அழிந்து வரும் ஓவியக் கலையை அடுத்த தலைமுறைக்குஎடுத்து செல்ல வேண்டும் என்பதே என்றார்.

Related Stories: