வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் : தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சூறைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை வரை மணப்பாறை பகுதியில் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும், இரவு நேரங்களில் திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: