சென்னை: டைட்டனின் நெபுலா நிறுவனம், 18 கேரட் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், அழகிய கை கடிகாரங்களை அறிமுகம் செய்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் நெபுலா சார்பில் நகாஷி கலெக்ஷன் என்ற பெயரில் அழகிய 5 தங்க கைக்கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் உள்ள கலை அம்சங்களான டோம்கள், தூண்கள், சித்திர வேலைப்பாடுகள், சக்கர வடிவமைப்புகள் என பழங்கால அரிய கலை நுட்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமான வடிவங்களில் இந்த கைக்கடிகாரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள கடிகாரங்களை விட மிக அழகானதாகவும், வைரங்கள் பொருத்தியதாகவும் உள்ளன. ஆன்யா, ஆத்யா, அக்ஷரா, அதுல்யா, ஏஷனா என ஐந்து கடிகாரங்களுக்கும் அதன் தன்னிகரற்ற சிறப்பை குறிக்கும் வகையில் பழமையான கலை நுட்பம் மற்றும் பெருமையை பறை சாற்றும் வகையி–்ல் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.