திருவில்லி. அரசுப் பள்ளியில் குளம்போல மழைநீர் தேக்கம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல, மழைநீர் தேங்கியுள்ளதால் மாணவ, மாணவியர் வகுப்பறைக்குச் செல்ல அவதிப்படுகின்றனர். மேலும், அவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் திரு.வி.க அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மேலும், இந்த பள்ளி வளாகத்திலேயே திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால், ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் மிகவும் வகுப்பறைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர். மேலும், மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவ, மாணவியருக்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: