தீபாவளியை முன்னிட்டு தங்க பத்திரம் வெளியீடு கிராம் 3,835 ஆக நிர்ணயம்

புதுடெல்லி: மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 6வது தங்க பத்திரத்தை நேற்று வெளியிட்டது. இதற்கு கிராம் 3,835ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆபரண தங்கம் மீதான மோகத்தை குறைக்கும் வகையிலும், பத்திர வடிவிலான தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் தங்க பத்திரங்களை மத்திய அரசு அறிமுகம் செய்தது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 5 பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 6வது தங்க பத்திரம் நேற்று வௌியிடப்பட்டது. இதற்கு கிராம் 3,835 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த தங்க பத்திரத்தில், தந்தேராஸ் தினமான வரும் 25ம் தேதி வரை முதலீடு செய்யலாம். தந்தேராஸ் தினம் தங்கத்தில் முதலீடு செய்ய ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இதுதவிர, ஆன்லைன் மூலமாகவும் டிஜிட்டல் வடிவிலும் பணம் செலுத்தி வாங்குவோருக்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி உண்டு என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் ஒரு நிதியாண்டில் தங்க பத்திரங்களில் ஒரு கிராம் முதல் 500 கிராம் வரை முதலீடு செய்யலாம்.

Related Stories: