தொடர்ந்து செத்து மடிவதை தடுப்பதற்கு பெரம்பலூரில் மான்கள் சரணாலயம் அமைக்கப்படுமா?

பெரம்பலூர்: கடந்த 2018-19 ம் ஆண்டில் மட்டும் பெரம்ப லூர் மாவட்டத்தில் வனத் துறை ஒப்புதலின்படி 54 மான்கள் பலியாகி உள்ளது. சாவு எண்ணிக்கையைத் தடுக்க சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகாவில் பண்டகபாடி, வெண்பாவூர், கை.களத்தூர், வ.மாவலிங் கை, காரியனூர், வெள்ளுவாடி, ரஞ்சன்குடி, மேட்டுப் பாளையம், அன்னமங்கலம், அரசலூர், சின்னாறு, குன்னம் தாலுகாவில் சித்தளி, பேரளி, பெரம்பலூர் தாலுகாவில் களரம்பட்டி, அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலியூர், இரட்டைமலை சந்து, நாவ லூர், சத்திரமனை, ஆலத் தூர் தாலுக்காவில் நக்க சேலம், பாடாலூர் ஆகியப் பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் 400முதல் 500 வரையிலான அரிய வகை புள்ளி மான்கள் வசித்து வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில்  நிலவிவந்த கடுமையான வறட்சி காரணமாக, தண் ணீருக்காகவும் உணவுக் காகவும், வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, அருகி லுள்ள கிராமங்களைச் சேர் ந்த ஏரிகளிலும், மலையடி வாரப் பகுதிகளிலும் தஞ் சம் புகுந்த மான்கள், அவற்றையே தற்போதைய இருப்பிடமாக கொண்டுள்ளன. இவற்றில் சில தாவிச் செல்லும் போது கிணறுகளில் தவறி விழுந்து பலியாவதும், சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி பலியாவதும், தெருக்களுக்குள் புகுந்தபோது தெரு நாய்கள் கடித்து படுகாயம் அடைவதும் வழக்கமாக உள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கும் குறைவாக இருந்த மான்களின் எண் ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து  பெரம்பலூர் மாவட்டத்தில்மட்டும் ஏற க்குறைய 500 மான்கள் வசித்து வருகின்றன.

இந்த மான்கள், மரங்கள் அடர்ந்த காப்புக் காடுகளில் வசித்தபோதும், வனத்து றையால் மான்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. காரணம் வனப்பகுதியி லுள்ள மரங்களை கொள் ளையர் வெட்டியெடுத்து விற்க வனத்துறையினரே உடந்தையாக இருந்தது. மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் நூற்றுக் கணக் கான டன் மரங்கள் கொள் ளை போனபோதே வெட்ட வெளிச்சமானது. அதோடு வனங்களில் வசிக்கும் மான்களுக்கு குடிநீர் வசதி யை செய்துகொடுக்காதது, 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சூரிய மின்வேலி சிதிலமைடைந்தும் அதனை சரிசெய்யாதது, புதிய மின் வேலிகள் அமைக்கப் பரிந் துரைக்காதது, மரக்கன்றுகள் நட்டு வனப்பரப்பை அதிகரிக்கும் அரசு உத்தரவுக ளை அலட்சியப் படுத்து வது என வனத்துறை அலு வலர்கள் ஒருபுறம், நூற் றுக் கணக்கான மான்க ளும், மயில்களும் வசிக்கும் மாவட்டத்திற்கு தொடர்ந்து பொறுப்பு வன அலுவலர் களையே நியமிக்கும் மாநில அரசு ஒருபுறம் என பெர ம்பலூர் மாவட்ட வனத்து றை பெயரளவில்தான் உள்ளது. இதனால் இயற்கை யாக சாகும் முன்பாக இறைச்சிக்காக பலியாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மத்தியில் வேதனையைத்தான் அளித்து வருகிறது.

அக்கரையற்ற அரசு அலு வலர்களால் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட அரிய வகை மான்கள் இறப்பது அரசுத்துறையாலேயே அம்பலமாகியிருப்பது அதிர்ச்சியை அளித்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2018-2019ம் ஆண்டில் மட்டும் பாம்புகடித்து 1 மான், கிணற்றில் விழுந்து 6மான்கள், நாய்கள் கடித்து 12மான்கள், சாலை விபத்துகளில் 28மான்கள், இயற்கையாக 6மான்கள் என இறந்துள்ள நிலையில் கடந்த 18ம்தேதி இறைச்சிக்காக 1மான் என மொத்தம் 54மான்கள் இறந்துள்ளன என்பது மாவட்ட வனத்து றை வெளியிட்ட ஒப்புதல் வாக்குமூலமாகும். ஆண்டு க்கு 54மான்கள் இறந்து வருவது நீடித்தால், இருக்கிற 500 மான்களும் இன்னும் 10 ஆண்டுகளில் இல்லாத நிலைதான் காணப்படும். இதற்காக இருக்கிற மான் களைக் காப்பாற்றவாவது மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உணவுக்காவும், தண்ணீரு க்காகவும், சாலைகளைக் கடக்கும்போது வாகனங் கள்மோதி இறந்தது மட்டுமே 28 என்பது வேதனைக் குரிய ஒன்றாகும். அருகிலு ள்ள திருச்சி மாவட்டம் எம். ஆர்.பாளையம் வனப் பகு தியில் ஆண்டுக்கு ஒரு முறை வந்து செல்லும் யானைகளுக்காக யானை கள் சரணாலயம் அமைத் திருக்கும்போது, ஆண்டு முழுக்க குடியிருக்கும் மான் களைக் காப்பாற்ற மான் கள் சரணாலயம் அமைக்க க் கூடாதா என்றக் கேள்வி யும் எழுந்துள்ளது. வனப்ப குதியைவிட்டு மான்களாக வெளியேறும்போது வாக னம் மோதியோ, தெருக்க ளில் புகும்போது நாய்கள் குதறியோ, கிணற்றில் விழுந்தோ இறப்பது ஒரு புறமிருக்க, தற்போது மான் களின் இருப்பிடத்திற்கே சென்று இறைச்கிக்காக வேட்டையாடுவது ரஞ்சன் குடி வனப்பகுதியில் நடந்து ள்ளது பேரதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இது வன விலங்குப் பாதுகாப்புச் சட்ட த்திற்கு விரோதமான செய லாகும். இதனைத் தடுக்கவாவது மான்களுக்கான சரணாலயம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் மனமுவந்து நடவடிக்கை எடுத்து, மான்கள் சரணால யத்தை சித்தளி, வெண்பாவூர், கைகளத்தூர் பகுதிக ளில் எங்காவது அமைத்து அனைத்து மான்களையும் அதில் கொண்டு வந்து சேர்த்தால், வண்டலூர் வன விலங்கு சரணாலயம் போல பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பேர் கிடைக்கும் என்பது வன விலங்கு ஆர்வலர்களின் வேண்டு கோளாக உள்ளது.

Related Stories: