ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஏலம்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய அடுத்த மாதம் ஏல அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  ஏர் இந்தியா நிறுவனம் ₹58,000 கோடி கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை மட்டும் விற்க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. இதை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏல அறிவிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. ஏர் இந்தியாவை வாங்க சில நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன’’ என்றனர்.

Related Stories: