எர்டோகனின் பாக். ஆதரவு பேச்சால் பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 2 நாள் துருக்கி பயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் துருக்கி நாட்டுக்கு 2 நாள் பயணமாக செல்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. துருக்கியில் வருகிற 27, 28ம் தேதி நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது.அனால், கடந்த செப்டம்பரில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் துருக்கி அதிபர் எர்டோகனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Advertising
Advertising

அப்போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் பேசினார். அதில், பாகிஸ்தானுக்கு ஆதரவு ெதரிவிக்கும் வகையில் எர்டோகனின்  கருத்துக்கள் இருந்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் துருக்கி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: