கால்நடை வாரியம் அமைக்க வேண்டும்: யாதவ மகாசபை தலைவர் அரசுக்கு வலியுறுத்தல்

கோவில்பட்டி: தமிழகத்தில் கால்நடை வாரியம் அமைக்க வேண்டுமென யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் எத்திராஜ், இளைஞரணி செயலாளர் வரதராஜன் மற்றும் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மகாசபை துணைத் தலைவருமான மலேசியா பாண்டியன், தமிழ்நாடு கபடி கழகத்தின் இணைச் செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கோவில்பட்டி அருகே கட்டாலங்குளம் மணிமண்டபத்தில் உள்ள  அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து லிங்கம்பட்டி கிராமத்தில் மின்சாரம் தாக்கி இறந்த சின்னராஜ் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினர்.

பின்னர் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘தமிழக அரசு சாதிவாரியாக கணக்கெடுத்து விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும். யாதவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கால்நடை வாரியம் அமைத்து அதற்கு பெருவாரியாக இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாதவரை தலைவராக நியமிக்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி வீரன் அழகுமுத்துக்கோன் நலச்சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் முத்துகிருஷ்ணன்,பொருளாளர் குமார், துணை தலைவர் முருகன், இணை தலைவர் மாரியப்பன், அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர் வனஜா, வரதராஜன், மனோகரன், வக்கீல் சபாபதி ரெங்கநாதன், தேவேந்திரன், நவநீதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: