சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக போதை மாத்திரைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அதிகமாக சப்ளை செய்யப்பட்டு வந்தன. மாலை நேரங்களில் மாணவர்கள் போதை பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஓட்டல் பார்களில் கடந்த சில மாதங்களாக போதை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்கள், மீண்டும் மீண்டும் தங்களது பார்களுக்கு வருவார்கள் என்பதால்தான், இதுபோன்ற மாத்திரைகளை சில பார் உரிமையாளர்கள் விற்பனை செய்து வருவாதகவும் கூறப்படுகிறது.குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த போதை மாத்திரைகள் பார்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் போதை மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக சென்னையில்தான் அந்த மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இது குறித்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை: அதிர்ச்சி தகவல்கள்
- கல்லூரி மாணவர்கள்
- சென்னை பள்ளி
- அதிர்ச்சி தகவல். சென்னை பள்ளி
- மருந்து மாத்திரை விநியோகத்திற்கான கல்லூரி மாணவர்கள்