ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம், கர்ப்பிணிகள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இணை உணவாக, மாதந்தோறும் 215 மெட்ரிக் டன் சத்துமாவு வழங்கப்படுகிறது. இந்த சத்துமாவு, ராஜபாளையம் அருகே, தளவாய்புரத்தில் உள்ள மகளிர் மேம்பாட்டு தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது. சத்துமாவில் கோதுமை மாவு, வெல்லத்தூள், சோயா மாவு, வறுத்த கேழ்வரகு மாவு, முளை கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில், விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்களில், விநியோகம் செய்யப்படும் சத்துமாவில் புழுக்கள், வண்டுகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் அதிர்ச்சியடைந்தனர்.