கோயில் இடிப்பு அதிருப்தி பாஜவில் இருந்து ஏஏபிக்கு வந்தார் சவுத்தரி குமார்

புதுடெல்லி: கருத்து வேறுபாடு முற்றி பகுஜன் சமாஜ் கட்சியில் (பிஎஸ்பி) இருந்து பாஜவிற்கு தாவிய சவுத்தரி சுரேந்திர குமார், ரவிதாஸ் கோயில் இடிப்பு விவகாரத்தை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார்.கடந்த 2008ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பிஎஸ்பி எம்எல்ஏவாக டெல்லியின் கோகுல்புரி தொகுதியில் தேர்வானவர் சவுத்தரி சுரேந்தர் குமார். மூன்று மாதங்களுக்கு முன் அவர் பாஜவில் சேர்ந்தார். அதற்கு முன்பு வரை பிஎஸ்பி மாநில தலைவராகவும் அவர் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் பாஜவில் சேர்ந்த சவுத்தரி, அங்கு 3 மாதம் மட்டுமே நீடித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.

இது பற்றி சவுத்தரி கூறுகையில், ‘‘துக்ளகாபாத் ரவிதாஸ் கோயில் இடிப்பு சம்பவம் எனது ஆன்மிக உணர்வுகளை புன்படுத்தியது. அதே சமயம், கல்வி, சுகாதாரம், மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து என மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி பணிகளில் அயராது பணியாற்றும் ஆம் ஆத்மி கட்சியை மாற்றாக கருதி, முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில் சேர்ந்துள்ளேன்’’, எனக் கூறியுள்ளார்.கட்சிக்கு வந்துள்ள சவுத்தரியை வரவேற்று கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘மக்களுக்கு நல்லது செய்ததை உணர்ந்து மற்ற கட்சிகளில் உள்ள நல்ல தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு படை எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’, எனக் கூறியுள்ளார்.

Related Stories: