மோடி பேச்சுக்கு பாக். எதிர்ப்பு நதி நீரை திசை திருப்ப முயற்சிப்பது அத்துமீறல்

இஸ்லாமாபாத்:  தனது நட்டுக்கு வரும் நதி நீரை திசை திருப்ப முயன்றால் அது அத்துமீறலாக கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்த நடவடிக்கையால் இந்தியா -பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் தனது உள்நாட்டு விவகாரம் என இந்தியா கூறிவரும் நிலையில், பாகிஸ்தான் இதை சர்வதேச பிரச்னையாக்க முயற்சித்து வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், அரியானா சட்டப்பேரவை தேர்தல் பிரசார கூட்டத்தில் இரு தினங்களுக்கு முன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் தடுத்து நிறுத்தப்படும்,’ என்று கூறினார். இதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேற்கு நதிகள் மூன்றின் மீதும் பாகிஸ்தானுக்கு சிறப்பு உரிமை உள்ளது. இந்த நதிகளின் நீரை திசை திருப்பும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டால், அது அத்துமீறலாக கருதப்படும். அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது, என்றார்.

Related Stories: