டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

தூத்துக்குடி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். காய்ச்சலால்  அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து உடல்நலம் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். தூத்துக்குடி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரபடுத்தி வருகின்றது என கூறினார். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10% பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது என கூறினார். தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என தெரிவித்தார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 61 பேருக்கும், ஸ்டானிலியில் 5 பேருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினார். தற்போது செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 253 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தில் வைரஸ் காய்ச்சலால் 5 வயது சிறுமி நந்தினி உயிரிழத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: