ஜிம்னாஸ்டிக்ஸ் தங்க மங்கை

உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தனது 25வது பதக்கத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் (22 வயது), ஈடு இணையற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ளார். இவர் தனது 24வது பதக்கத்தை முத்தமிட்டபோது பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து உலக அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தனது பதக்க வேட்டையை தொடங்கிய சிமோன் பைல்ஸ் இதுவரை 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார். ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்ற நடப்பு தொடரில் 5 தங்கங்களை அள்ளிய பைல்ஸ் பதக்கங்களுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

Advertising
Advertising

Related Stories: