2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு : உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு

சுவீடன் :  2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

டைனமைட் உள்ளிட்ட 355 பொருட்களை தயாரித்து பெரும் பொருள் ஈட்டிய சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல், தமது மறைவுக்கு பின்னர், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, இயற்பியல் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்க உயில் எழுதி வைத்திருந்தார்.இதன் படி கடந்த 1901-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் உலக அளவில் சிறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக் குழுவினர் இந்த ஆண்டு பரிசுக்குரியவர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி,இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

இந்நிலையில்  2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொண்டது, அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்ததற்காக அபிஜித்திற்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வகுப்பதற்காக பானர்ஜி, எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் க்ரீமர் ஆகியோருடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டிருந்தார். தற்போது இந்த மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. கொல்கத்தாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, தனது கல்லூரிப்படிப்பை கொல்கத்தா கல்லூரிகளில் முடித்திருந்தார். மேற்படிப்புக்காக எம்.ஏ. பட்டத்தை டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அவர் பெற்றார். இந்தியாவில் பிறந்தபோதிலும் அவர் தற்போது அமெரிக்க குடிமகனாக உள்ளார்.  நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டூஃப்லோ கணவர் - மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: