என்.ஐ.ஏ-வின் நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் காரணமாக பாகிஸ்தான் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது: அஜித்தோவல்

புதுடெல்லி: ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்து கைதான 127 பேரும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் உசேன் பேச்சால் கவரப்பட்டவர்கள் என்று தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. டெல்லியில் தீவிரவாத எதிர்ப்பு படை மற்றும் சிறப்பு அதிரடி படை அமைப்புகளின் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ ஏற்பாடு செய்துள்ள 2 நாட்கள் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், ஒவ்வொரு அமைப்பும் கண்காணிப்புடன் செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீவிரவாத வழக்குகளை இதர வழக்குகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டம் (FAFT) காரணமாக பாகிஸ்தான் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும், ஒரு குற்றவாளிக்கு ஒரு மாநிலத்தின் ஆதரவு இருந்தால், அது ஒரு பெரிய சவாலாக மாறும். சில மாநிலங்கள் இதை மாஸ்டர் செய்துள்ளன. பாகிஸ்தான் அதை தனது மாநிலக் கொள்கையின் ஒரு கருவியாக மாற்றியுள்ளது என தெரிவித்தார். மேலும் வங்கதேசத்தில் இருந்து செயல்படும் ஜமாத் உல் முஜாஹைதீன் அமைப்பினர் அகதிகள் என்ற பெயரில் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பலரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பினருக்கு கிடைத்த வெளிநாட்டு நிதியுதவி தற்போது முடக்கப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வீரர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்த அந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

Related Stories: