துளித்துளியாய்.....

* உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 48 கிலோ லைட் பிளைவெயிட் பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி (அரியானா) வெள்ளிப் பதக்கம் வென்றார். பைனலில் ரஷ்யாவின் எகடரினா பல்ட்சேவாவுடன் மோதிய மஞ்சு ராணி 1-4  என்ற கணக்கில் போராடி தோற்றார்.

* உலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் 24வது பதக்கத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ், பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து முதலிடம் பிடித்தார்.
Advertising
Advertising

* டச் ஓபன் சூப்பர்-100 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் அவர் 15-21, 21-14, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுசுகே ஒனோடெராவை  வீழ்த்தினார்.

* தென் ஆப்ரிக்க ஸ்பின்னர் கேஷவ் மகராஜ் காயம் காரணமாக 3வது டெஸ்டில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியா - வங்கதேசம் மோதும் உலக கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ளது.

Related Stories: