வடமாநிலங்களில் மழையால் பாதிப்பு: உளுந்து, வத்தல் விலை ‘கிடுகிடு’... எள் விலையும் எகிறியது

விருதுநகர்: வடமாநிலங்களில் மழையால் சேதமடைந்து வருவதால், விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு அதிகபட்சமாக ரூ.1,300 வரை விலை உயர்ந்துள்ளது. இதேபோல, வத்தல் குவிண்டாலுக்கு ரூ.1,000, எள் மற்றும் கடலைப்பிண்ணாக்கு மூட்டைக்கு ரூ.100 விலை உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் மழையால் உளுந்து சேதமடைந்த நிலையில் மார்க்கெட்டிற்கு வருகிறது. இதனால், தரமான உளுந்து கிடைப்பதில்லை. தீபாவளி பண்டிகைக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் உளுந்தம்பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.1,300 வரை விலை உயர்ந்துள்ளது. இதன்படி, கடந்த வாரம் ரூ.7,000க்கு விற்ற லைன் உளுந்து (100 கிலோ), இந்த வாரம்  ரூ.7,500க்கும், ரூ.7,500க்கு விற்ற பருவட்டு உளுந்து ரூ.8,000க்கும், ரூ.6,500க்கு விற்ற பர்மா உளுந்து ரூ.7,200க்கும், ரூ.9,500க்கு விற்ற லைன் உளுந்து ரூ.10,800க்கும், ரூ.8,200க்கு விற்ற பர்மா உளுந்து ரூ.9,200க்கும்,

ரூ.7,800க்கு விற்ற தொளி உளுந்து ரூ.9,000க்கும் விற்பனையானது. வத்தல் விலை உயர்வு ஆந்திராவில் புதுவத்தல் வரத்து தேவையான அளவு இல்லை. இதனால், மார்க்கெட்டில் டிசம்பர் வரத்து தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.14,000 முதல் ரூ.15,000 வரை விற்ற குண்டூர் புதுவத்தல், இந்த வாரம் ரூ.15,000 முதல் ரூ.16,000 வரை விற்பனையானது. இதேபோல, ரூ.1,600க்கு விற்ற எள் பிண்ணாக்கு (50 கிலோ), இந்த வாரம் ரூ.1,700க்கும் ரூ.4900க்கு விற்ற கடலைப்பிண்ணாக்கு (100 கிலோ) ரூ.5,000க்கும் விற்பனையானது.  

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்

பாசிப்பயறு (தான்சானியா) - ரூ.6,000,

புதுபாசிப்பயறு (சேதமடைந்தது) - ரூ.5,800,

பாசிப்பயறு லைன் (100 கிலோ) - ரூ.7,700,

பாசிப்பருப்பு லைன் - ரூ.9,300,

பாசிப்பருப்பு நாடு - ரூ.8,700,

அவியல் பாசிப்பயறு (மகாராஷ்டிரா) - ரூ.9,000,

அவியல் பயறு (ஆஸ்திரேலியா) - ரூ.10,000.

துவரை லைன் - ரூ.6,200,

துவரம்பருப்பு லைன் - ரூ.8,600,

துவரம்பருப்பு நாடு - ரூ.8,200,

துவரம்பருப்பு உடைசல் - ரூ.7,900.

நாடு வெள்ளை கொண்டைக்கடலை- ரூ.8,000,

கொண்டைக்கடலை சிவப்பு - ரூ.6,200,

கடலைப்பருப்பு - ரூ.6,800,

பொரி கடலை (55 கிலோ) - ரூ.4,300,

பட்டாணி பருப்பு (ஆஸ்திரேலியா) (100 கிலோ) - ரூ.7,600,

பட்டாணி பருப்பு (கனடா) - ரூ.6,100,

பட்டாணி வெள்ளை (கனடா) - ரூ.5,400,

ரங்கூன் மொச்சை - ரூ.6,400,

தட்டைப்பயறு மூட்டை - ரூ.5,800.

நாடு மல்லி (40 கிலோ) - ரூ.3,800,

லைன் மல்லி - ரூ.3,000,

கடலை எண்ணெய் (15 கிலோ) டின் - ரூ.2,320,

பாமாயில் - ரூ.1,010,

நல்லெண்ணெய் - ரூ.4,373,

நிலக்கடலைப்பருப்பு (80 கிலோ) - ரூ.7,000,

சங்கரன்கோவில் புது வத்தல் குவிண்டாலுக்கு ரூ.13,000 முதல் ரூ.13,500 வரை விற்பனையானது.

Related Stories: