சீன அதிபர் ஜி ஜின் பிங் பயணம் செய்யும் சொகுசு காரின் சிறப்பம்சங்கள்...

சென்னை: சீன அதிபர் ஜி ஜின் பிங் பயணம் செய்வதற்காக சொகுசு கார் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஹாங்கி எல்-5 என்ற ரகத்தை சேர்ந்த 4 கார்கள் சென்னைக்கு சீன சரக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. ஹாங்கி என்றால் சீன மொழியில் செங்கொடி என்று அர்த்தமாம். FAW என்ற பாரம்பரியம் மிக்க சீன நிறுவனம் இந்த காரை தயாரிக்கிறது.

இந்த வகை கார் சீனாவில் 1958-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது சீன அரசுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கார் ஆகும். 4-வது தலைமுறையினருக்கான இந்த கார் சீனாவிலேயே இந்த கார் விலை உயர்ந்த மதிப்புமிக்க காராக பார்க்கப்படுகிறது. 408 குதிரை திறன் கொண்ட எஞ்சின், மற்றும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ்களை கொண்ட ஹாங்கி கார் 10 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது.

கருப்பு நிறம் கொண்ட இந்த கார் 2 மீ்ட்டர் அகலம் ஒன்றரை மீட்டர் உயரம் கொண்டது. 3,150 கிலோ எடைகொண்ட இந்த காரில் 105 லிட்டர் பெட்ரோல் அல்லது கேஸ் நிரப்ப முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 500 மைல்கல் பயணிக்க முடியும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த காரில் தடைபடாத தகவல் தொடர்பு, மற்றும் செயற்கைகோள் தொலைபேசி வசதி உள்ளது.

ஹாங்கி காரின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் துப்பாக்கி குண்டு துளைக்காதப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூ.5 கோடியே ரூ.60 லட்சம் ஆகும். மற்ற 3 கார்களில் சீனாவில் இருந்து வரும் சிறப்பு குழுவினர் பயணம் செய்ய உள்ளனர். அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் த வெஸ்ட் என்ற காருக்கு நிகரான வசதிகள் இல்லாவிட்டாலும் அதில் பெருமளவு வசதிகளை ஜி ஜின் பிங் கார் பெற்றுள்ளது.

Related Stories: