8,000 கார்தான் விற்பனை எலக்ட்ரிக் கார்களுக்கு மவுசு அதிகரிக்குமா?

புதுடெல்லி: ஆட்டோமொபைல் துறை தொடர்ந்து மந்த நிலையில் தவித்து வருகிறது. பண்டிகை சீசனாக இருந்தும்., கடந்த மாதமும் வாகன விற்பனை நிலவரம் படு மோசமாகவே உள்ளது. இந்நிலையில், பயன்பாடு அதிகமாக உள்ளதால் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கு இறக்குமதியை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.இந்த நிலையை மாற்றவும், சுற்றுசூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில், தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், கடந்த 6 ஆண்டுகளில் 8,000 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் கார் டிரைவர் பணியில் சுமார் 15 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக, வாடகை கார்களை எலக்ட்ரிக் கார்களாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும் கடந்த 6 ஆண்டுகளில் 8,000 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கி சுமார் 4 ஆண்டுகளாகியும் விற்பனையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டதை விட 2 மடங்கு வாகனங்கள் சீனாவில் 2 நாட்களிலேயே விற்கப்பட்டுள்ளன என புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: