அமைந்தகரை பகுதியில் ஏடிஎம் மெஷினில்நூதன கொள்ளை : வடமாநில ஆசாமிகள் கைது

சென்னை: அமைந்தகரை பெருமாள் கோயில் அருகே ஸ்டேட் பாங்க் ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையம் கடந்த 2ம் தேதி செயல்படவில்லை, என வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில், வங்கி ஊழியர்கள் வந்து பார்த்தபோது, மெஷின் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பேர் கார்டு மூலம் பணம் எடுத்துவிட்டு ஏடிஎம் மெஷினை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக வங்கி மேலாளர் சவுரிஷா, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார், சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரித்தபோது, அந்த 2 பேர், அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் (29), அப்சல் (20) என்பது தெரிந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்தபோது, அவர்களிடம் 25 ஏடிஎம் கார்டுகள், ₹20 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் மெஷினில் கார்டை போட்டு பணம் வெளியே வந்தவுடன் மெஷினை சுவிட்ச் ஆப் செய்துவிடுவதும், பின்னர் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு உங்கள் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கும்போது திடீரென சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. பணம் வரவில்லை. ஆனால் வங்கி கணக்கில் பணம் குறைகிறது என புகார் செய்வார்களாம்.  இதையடுத்து வங்கி நிர்வாகத்திடம் இருந்து பணத்தை வாங்கி விடுவார்களாம். இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: