1 ,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் இருந்து அக்.9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு நீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து அக்.9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பெரியாறு பாசன பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், பெரியாறு பாசன பகுதியில் ஒரு போக நிலங்களுக்கு பாசனத்திற்காகவும், திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கும் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.

இது தொடர்பாக பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு 9.10.2019 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.இந்த நீர் திறப்பால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1 ,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும்  விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்  என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: