சின்னமனூர் தடுப்பணைகளில் வெள்ளப்பெருக்கு

* தண்ணீர் சீறி பாய்கிறது

சின்னமனூர் : சின்னமனூர் தடுப்பணைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் தண்ணீர் சீறி பாய்ந்து வருகிறது. முல்லைப்பெரியாற்று அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்வதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது 1400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீண்ட முல்லைப்பெரியாற்றின் வழியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேகமாக சென்று கொண்டிருக்கிறது.முல்லைப்பெரியாற்றின் வரிசையில் நான்கு இடங்களில்தான் பிரமாண்டமான மெகா தடுப்பணைகள் உயர்ந்தும் முல்லைப்பெரியாற்றுக்கு பெருமை சேர்ப்பது உத்தமபாளையம், சின்னமனூர் அருகே எல்லப்பட்டியிலுள்ள மார்க்கையன்கோட்டை, சின்னமனூர் பூலாநந்தபுரம், சீலையம்பட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களிலுள்ள தடுப்பணைகள் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது

.தற்போது வெள்ளமென பெருக்கெடுத்திருப்பதால் மளமளவென தண்ணீர் வருவதால் கரை எது தடுப்புகள் எது என தெரியாமல் வெள்ளம் கரைபுரண்டு சீறிபாய்ந்து வைகை அணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து அணைப்பகுதிகளுக்குள் யாரும் போகக் கூடாது என எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது. எதார்த்தமாக குளிக்க செல்பவர்கள் காலை தண்ணீரில் வைத்தாலே சர்ரென இழுத்து விடும் அபாயகரமான நிலையும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஆனால் தண்ணீரின் அளவினை குறைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளனர். நடவு பணிகள் இன்னும் முடியாமல் அரைகுறையாக இருக்கின்ற நிலையில் 120 நாட்களுக்கு தேவைப்படுகின்ற பாசனநீருக்கு பங்கம் ஏற்பட்டு விடும் நிலை உள்ளதால் நெல் விவசாயிகள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சில இடங்களில் நடவு துவங்கியவர்கள் அப்படியே விட்டு விடலாம் என்ற எண்ணத்திலும் இருக்கின்றனர்.

Related Stories: