மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மேலும் ஒருவாரம் அவகாசம் கோரிய கேரள கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க மேலும் ஒருவார கால அவகாசம் தர கேரளா விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஒருநாள் கூட ஏன் ஒருமணி நேரம் கூட கூடுதல் அவகாசம் தரமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மரடு வழக்கு தொடர்பாக எந்த முறையீட்டையும் கேட்கமாட்டோம், எந்த மனுவையும் விசாரிக்கமாட்டோம் என்று நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

கேரள அரசுக்கு எச்சரிக்கை

மரடு அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் மீண்டும் மீண்டும் முறையிட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோர ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க பிறப்பித்த உத்தரவை மாற்றமுடியாது. மரடு வழக்கில் தொடர்புடைய மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கின் பின்னணி

கொச்சி நகரின் மரடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் உள்ளன. இந்த சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தக் குடியிருப்புகளை 138 நாள்களுக்குள் இடிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், வீட்டு உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ. 25 லட்சத்தை 4 வாரங்களில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில் கேரளத்தில் மரடு குடியிருப்புகளை இடிக்க தடை விதிக்கக் கோரி மரடு குடியிருப்பு வாசிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மரடு குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: