கெலவரப்பள்ளி அணைக்கு தென்பண்ணை ஆற்றில் இருந்து ரசாயன நுரை: விவசாயிகள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு அதிகப்படியான நுரையுடன் தென்பண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வந்துக்கொண்டு இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பண்ணை ஆறு தமிழகத்தின் எல்லையில் உள்ள கொடியாலம் தடுப்பணை வழியாக கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் தென்பண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகப்படியாக செல்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு கர்நாடகா தமிழக எல்லையில் உள்ள தொழிற்சாலைகள்  ரசாயன கழிவுகளை ஆற்றில் கலந்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிக நுரையுடன் கொடியாலம் தடுப்பணையில் இருந்து வரும் தண்ணீர் கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு வராமல் கிருஷ்ணகிரிக்கு செல்கிறது. பாசன வசதி பெற தண்ணீருக்காக காத்துக்கொண்டிருந்த ஓசூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தென்பண்ணை ஆற்றில் மிதக்கும் நுரையால் கலக்கம் அடைந்துள்ளனர்.

Related Stories: