நாமகிரிப்பேட்டை அருகே பசிறுமலையில் 40 ஆயிரம் விதைப்பந்துகள் விதைப்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, பசிறுமலையில் 40 ஆயிரம் விதைப்பந்துகளை வீசும் பணியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து வெள்ளக்கல்பட்டியை ஒட்டியுள்ள பசிறுமலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் பெரிய வகை மரங்கள் குறைவாகவே உள்ளன. இதனால், வனத்துறை பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது. இந்த மலையை வனமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி முடிவு செய்துள்ளனர். அதன்படி, பசிறுமலை நண்பர்கள் குழுவாக உருவாகியுள்ள இவர்கள், மலையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற இலக்குடன் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக, 30 ஆயிரம் விதைப்பந்துகளை தயாரித்த இந்த குழுவினர், கடந்த 16ம் தேதி பசிறுமலை வனப்பகுதியில் வீசினர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் விதைப்பந்துகளை தயார் செய்தனர். இதை 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டிராக்டரில் கொண்டு சென்று, வனப்பகுதியில் வீசும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: