இடைத்தேர்தலில் போட்டியிட வசதியாக தமாங்கின் தடை குறைப்பு

புதுடெல்லி: சிக்கிமில், ‘சிக்கிம் கிராந்தி மோர்சா கட்சி’யின் தலைவராக இருப்பவர் பிரேம் சிங் தமாங். இவர் ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக, தமாங் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதற்கிடையே, கடந்த மே மாதம் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் தமாங்கின் கட்சி வெற்றி பெற்று, பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தேர்தலில் போட்டியிடாத தமாங், முதல்வராக பதவியேற்றார்.

அவர் முதல்வர் பதவியை தக்க வைக்க 6 மாதத்தில் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 11ன் கீழ், தனது தகுதிநீக்க காலத்தை குறைக்கக் கோரி மனு கொடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், தமாங்கின் தகுதி நீக்க காலத்தை வெறும் ஓராண்டு, ஒரு மாதமாக குறைத்து நேற்று உத்தரவிட்டது. மேலும், அவரது தகுதி நீக்க காலம் கடந்த 10ம் தேதியுடன் முடிந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால், வரும் 21ம் தேதி நடக்க உள்ள இடைத்தேர்தலில் தமாங் போட்டியிட அனுமதி கிடைத்துள்ளது.

Related Stories: