ரூ.30,000 கோடி கிடைக்குமா மத்திய அரசு எதிர்பார்ப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்குள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் ₹30,000 ேகாடி டிவிடென்ட் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக மோசமான சரிவை சந்தித்துள்ள, நிலையில், மத்திய அரசுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக ரிசர்வ் வங்கி உபரி நிதி ₹1.76 லட்சம் கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.  இந்நிலையில் கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ₹28,000 கோடியை வழங்கியது. 2017-18 நிதியாண்டில் ₹10,000 கோடி டிவிடென்ட் வழங்கப்பட்டது.

 நடப்பு நிதியாண்டில் டிவிடென்ட்டாக ₹30,000 கோடியை கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு ₹25,000 கோடி முதல் ₹30,000 கோடி வரை பெற திட்டமிட்டுள்ளது. ஆனால் இது குறித்து வரும் ஜனவரி மாதம்தான் முடிவு செய்யப்படும். இதில் பற்றாக்குறை ஏற்பட்டால் அரசு நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் சிறு சேமிப்பு நிதியில் இருந்து பயன்படுத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: