மேட்டூர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமிற்கு முதல்வர் 3 மணி நேரம் ஆகியும் வராத காரணத்தால் மக்கள் அதிருப்தி

சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று மேட்டூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு 3 மணி நேரம் மேல் ஆகியும் இன்னும் முதலமைச்சர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றும் இன்றும் சேலத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர் சேலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார். இந்த அடிப்படையில் தான் நேற்று வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்று காலை 9மணி அளவில் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் , மேட்டூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அங்கு இருக்கின்ற அதிகாரிகள், அங்கு இருக்கின்ற மக்களை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 7மணி முதலே கொண்டு வந்து சேர்த்தனர். அந்த ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறியதாக ஒரு பந்தல் அமைக்கப்பட்டு அதில் சுமார் ஆயிரம் பேர் அமர முடியும், ஆனால் மனு அளிக்க வந்தவர்கள் சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் காலை மணி முதல் மனு அளிக்க காத்திருக்கும் பொதுமக்கள், அந்த மைதானத்தில் எந்த ஒரு குடிநீர் வசதியும் இல்லாமல் வெயிலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காலை 9 மணிக்கு வரவேண்டிய முதலமைச்சர் எடப்பாடி இன்னும் வராத காரணத்தினால் மக்கள் அல்லல் படும் சூழ்நிலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

Related Stories: